வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்

பாசத்தோடும் ....
அன்போடும் ......
இரக்கத்தோடும் ....
வளர்த்த குழந்தையிடம் 
எதிர்பார்ப்புடனும் ...
ஒரு கேள்வி கேட்டேன்...??
*
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
*
ஒரு நொடி கூட தயங்காமல் ...
தோழியின் பெயரைச் சொல்லி...
நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!!

^^^

போடா இனிமேல் ...
வாழ்க்கையில் பேசாதே 
நீ ஒரு மனிதனா ...?
நான் செத்தாலும் என் ..
முகத்தில் முழிக்காதே ...
எவ்வளவு கேவலமாய் ........
திட்டினாலும்........!!!

சிரித்துகொண்டேதான்
பதிலளித்தான் ..
உன்னைவிட்டால் எனக்கு ..
யாரடா இருக்கிறார்கள் ..?
என் உயிர் நண்பன் ..
இந்த சொல் என்னையே 
கொன்று விருக்கிறது .......!!!

^^^
வருடங்கள் மாறும் 
பருவங்கள் மாறும் 
எண்ணங்கள் மாறும் 
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!

&

கவிப்புயல் , கவி நாட்டியரசர் 
+ + + இனியவன் + + +

Add a comment

You're using an AdBlock like software. Disable it to allow submit.